‘மேன்பவர்’ ஊழியர் முறையை ஒழிக்க புதிய சட்டங்கள் – அமைச்சர் வசந்த சமரசிங்க!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ‘மேன்பவர்’ ஊழியர் முறையை ஒழிப்பதற்காக தற்போதைய அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றி வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (07) கொழும்பில் நடைபெறும் தொழிற்சங்க தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நேரடியாக வேலை செய்து தமது உழைப்பை வழங்கும் ஊழியருக்காக இடைத்தரகர் ஒருவருக்குப் பணம் செலுத்துவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனச் சுட்டிக்காட்டினார்.

மேன்பவர் ஊழியர்களின் வேலைகளை நிரந்தரமாக்குவதற்கும் அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை மேலும் இது வலுப்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *