நாட்டின் பல நீர்த்தேக்கங்களிலிருந்து வான் கதவுகள் திறப்பு!

நாட்டில் பெய்த கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், பல முக்கிய நீர்த்தேக்கங்களின் மதகுகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் எடுத்துள்ளது.

இதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகள் தலா 02 அடிகளாலும், குருநாகல் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகள் தலா 01 அடிகளாலும் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், மொனராகலை அலிகொட்டார நீர்த்தேக்கத்தின் 03 வான்கதவுகள் தலா 02 அடிகளாலும், அனுராதபுரம் கலா வாவியின் 02 வான்கதவுகள் தலா 01 அடிகளாலும், ஹம்பாந்தோட்டை படகிரிய நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகள் தலா 02 அடிகளாலும் திறக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, ஹம்பாந்தோட்டை யோத வாவியின் 02 வான்கதவுகள் தலா 09 அங்குலங்களாலும், பதுளை அம்பேவெல நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகள் தலா 01 அங்குலங்களாலும், இரத்தினபுரி உடவளவ நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு தலா 01 அடி வீதத்திலும் திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *