அமெரிக்க கடற்படையின் Osprey விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்!

போயிங் (Boeing) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட MV-22B Osprey ரக விமானம், அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்து புறப்பட்டு இன்று சனிக்கிழமை (7) நண்பகல் 12.05 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்த விமானத்தின் விசேட அம்சம் என்னவென்றால், இது ஹெலிகொப்டரைப் போலவும் சாதாரண விமானத்தைப் போலவும் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமையாகும்.

இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள சுழலி இறக்கைகள், ஹெலிக்கொப்டரைப் போன்று மேல்நோக்கி அமைந்திருக்கும் வகையில் செயற்படுவதுடன், தேவைக்கேற்ப அவற்றை முன்னோக்கித் திருப்பி சாதாரண விமானத்தைப் போன்று அதிக வேகத்தில் பறக்கவும் முடியும்.

மேலும், இந்த விமானம் மேலெழுவதற்கு வழக்கமான விமானங்களைப் போன்று நீண்ட ஓடுபாதையில் வேகமாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஹெலிக்கொப்டரைப் போன்று செங்குத்தாக மேலெழுந்து தரையிறங்கும் திறனையும் கொண்டுள்ளது.

இவ்விமானம், இந்திய பெருங்கடலில் இலங்கைக்குத் தெற்கே சுமார் 50 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பலிலிருந்து புறப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (7) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் புறப்பட்டு, குறித்த அமெரிக்க கடற்படைக் கப்பலைச் சென்றடையவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *