மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்!

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று (21) இரவு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னதாகவே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த இணையக் கட்டமைப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், https://dmtappointments.dmt.gov.lk/ ஊடாக நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் எனவும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *