தர்மபுரத்தில் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்!

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசியக் கருத்திட்டத்தின் கீழ், சட்டவிரோத குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவில் இன்று (21.11.2026) நடைபெற்றது.

தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்கவின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகரன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் பிரஜா சிவில் பொலிஸ் குழுக்கள் மற்றும் கிராம மட்டப் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல், சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுத்தல், வீதி விபத்துக்களைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், இவ்வாறான குற்றச் செயல்களைத் தடுப்பதில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *