43 கிலோ கஞ்சாவுடன் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் கைது!

உலர்ந்த கஞ்சா தொகையை காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் ஹம்பேகமுவ பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனமல்வில – ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றினால் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் காரொன்றை நிறுத்திச் சோதனையிட்ட போது, அதிலிருந்து 43 கிலோகிராம் 200 கிராம் உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும், குறித்த காரில் இருந்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள், தாம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையே அது எனத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாகப் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், அவ்வாறான சுற்றிவளைப்பு நடத்தப்பட்டமைக்கோ அல்லது குறித்த கஞ்சா தொகையைக் கொண்டு செல்வதற்கான சட்டபூர்வ அனுமதி உள்ளமைக்கோ எவ்விதத் தகவல்களும் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவரும் மற்றும் மற்றைய சந்தேகநபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (23) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *