ஆசிய வர்த்தகத்தில் மசகு எண்ணெய் விலைகளில் இன்று பெரியளவிலான மாற்றங்கள் பதிவாகவில்லை.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியிலும் மத்திய கிழக்கில் தொடரும் கப்பல் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து மிகுந்த சூழலை முதலீட்டாளர்கள் கருத்தில் கொண்டதாலே விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.
பிரெண்ட் ((Brent) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 10 சதம் அல்லது 0.11 சதவீதத்தால் அதிகரித்து 92.67 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 16 சதம் அல்லது 0.19 சதவீதத்தால் உயர்ந்து 83.57 அமெரிக்க டொலராகக் காணப்பட்டது.
முன்னதாக இன்றைய வர்த்தக அமர்வின் ஆரம்பத்தில் பிரெண்ட் மசகு எண்ணெய் 1 டொலரால் குறைந்து பீப்பாய் ஒன்று 91.57 டொலராகவும் அமெரிக்க WTI மசகு எண்ணெய் 82.63 டொலர் என்ற குறைந்தபட்ச அளவையும் எட்டியிருந்தது.

