எனோக்ஸாபாரின் கொள்வனவுக்கு டொலர் ஒப்பந்தம்!

இதய நோயாளர்களுக்குப் பயன்படுத்தப்படும் எனோக்ஸாபாரின் சோடியம் ஊசி மருந்து 920,000 முன்நிரப்பப்பட்ட மருந்துக் குப்பிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4,000 சர்வதேச அலகுகள் கொண்ட 0.4 மில்லிலீற்றர் மருந்துக் குப்பிகளை கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் மூலம் 7 விலைமனுக்கள் பெறப்பட்டுள்ளன.

விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர், குறைந்த விலைமனுவை சமர்ப்பித்த Sezhen Technology Pharmaceutical Co. Ltd. நிறுவனத்திற்கு, பண்டச்செலவு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் உட்பட 828,000 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு ஒப்பந்தத்தை வழங்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *