செம்மஞ்சள் ஒளியில் ஜொலிக்கும் கொழும்பு!

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டை முன்னிட்டு, நவம்பர் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை கொழும்பு மாநகர சபை மற்றும் தாமரைக் கோபுரம் ஆகியன செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரவிடப்படவுள்ளன.

பெண்கள் அமைப்பான Women In Need, நெதர்லாந்து இராச்சியத் தூதரகம் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கிறது.

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் நோக்கில் இந்த ஒளியூட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள (BMICH) கமத்த ஸ்டூடியோவில் “மௌனத்திலிருந்து நீதியை நோக்கி” (From Silence to Justice) எனும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வில் நாடக நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *