சாமர சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சுமதிபால லியானஆரச்சி ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், குறித்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை விரைவாக நிறைவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு (CIABOC) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *