பிரச்சார செலவின் விபரங்களை 27 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்திற்கமைய தமது தேர்தல் பிரச்சார செலவின் விபரங்களை வேறுவேறாகத் தயாரித்து 27ஆம் திகதி செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணி அல்லது அதற்கு முன்னர்  உள்ளூர் அதிகார சபைகளின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட https://cf.slestions.gov.lk/ இணைய இடையிணைப்பியிலும் பிரவேசித்து பதிவுசெய்து கொண்ட பின்னர் அந்த இணையதளத்திற்கு தமது தேர்தல் விபரத்திரட்டுக்களை பதிவேற்றம் செய்யக்கூடிய வகையில் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் இக்காலத்துள் அவற்றை ஒப்படைக்க முடியாதிருப்பின், 27ஆம் திகதிக்கு முன்னர் வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் தலைவர்கள் போட்டியிட்ட உள்ளூர் அதிகார சபைகளின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு  கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபாலில் அனுப்பிவைப்பதற்கும் வாய்ப்புள்ளது.

2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் பிரிவிற்கமைய 27ஆம் திகதி நள்ளிரவு 12 மணி அல்லது அதற்கு முன்னர் தேர்தல் விபரத்திரட்டுக்களை ஒப்படைக்காதிருப்பதன் ஊடாக சட்டவிரோதமான செயலொன்றைப் புரிந்தவராகக் கருதி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *