முச்சக்கரவண்டிக் கட்டணம் அதிகரிக்கப்படாது – லலித் தர்மசேகர

பெட்ரோலின் விலை அதிகரித்தாலும், முச்சக்கரவண்டிக் கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

பெட்ரோலின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் முச்சக்கர வண்டி தொழிற்சங்கங்களுக்கு இல்லை.

முழு நாட்டிற்கும் கட்டணத்தை தீர்மானிக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது,

மேல் மாகாணத்தைப் பொறுத்தவரை மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையத்திடம் அதே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *