அஞ்சல் மூல வாக்குகளை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்

உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் நேற்று (04) நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு க. ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் மு. ப 11.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பு வாக்குகளை விநியோகிக்கும் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான கடமைகள், பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *