மட்டக்களப்பு நகரில் புதிய வீதி புனரமைப்பதற்கான ஏற்பாடு

மட்டக்களப்பிற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு இன்று  சனிக்கிழமை (05) மட்டு விமான நிலையம், புகையிரத நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு நகரில் இருந்து புதூர் பகுதியை இணைக்கும் வீதியை  விமானப்படைக்கான காணியின் ஊடாக புதிய வீதியை புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு இன்று காலை 9.00 மணிக்கு விஜயம் ஒன்றை  மேற்கொண்டு துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு விமானப்படை கட்டளை அதிகாரி  சரத் பண்டார, தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் திலகநாதன், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவி வனிதா செல்லப் பெருமாள் உள்ளிட்டோருடன் மட்டக்களப்பு நகர் புதூர் பகுதியை இணைக்கும் பாதை தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அதேவேளை கிழக்கு மாகாணத்திற்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை பார்வையிட பிரதியமைச்சர் புகையிரத நிலையத்தின் நிலை தொடர்பில் ஆராய்ந்ததுடன் இங்கு நிலவும் குறைபாடுகளை மிக விரைவில் தீர்த்து வைப்பதாக வாக்குறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *