யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவை கோரியதாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமருக்கும் 1996 உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் அணி உறுப்பினர்களுக்கும் இடையே கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜெயசூர்யா இந்த வேண்டுகோளை விடுத்தார்.
சவாலான காலங்களில் இந்தியா இலங்கைக்கு அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்து யாழ்ப்பாணத்தில் முன்மொழியப்பட்ட மைதானம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

