பூநகரி வெட்டுக்காடு பகுதியில் மக்கள் சந்திப்பு

பூநகரி பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தலைமையில்  பூநகரி வெட்டுக்காடு பகுதியில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
இரண்டு கட்சிகள் தான் இதுவரை நாட்டில் ஆட்சி செய்து வந்தனர். முதலாளித்துவ கட்சிகளே இவை தேசிய மக்கள் சக்தி அவ்வாறு இல்லை ஜனாதிபதி அனுரகுமார சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர் என இளங்குமரன் உரையாற்றிருந்தார்.
ஆட்சிக்கு வந்து நான்கு மாதத்தில் அஸ்வெசும அதிகரித்துள்ளோம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கு பணம் வழங்கியுள்ளோம்.
வடக்கில் அதிக  தொழிற்ச்சாலைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.
பாராளுமன்ற தேர்தலில் அதிகளவு வாக்குகளை இந்த பகுதி மக்கள் பெற்று தந்திருக்கிறார்கள் அதே போல் கிராமத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவை காட்டுவதற்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் மக்கள் ஆதரவைத்தரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *