பரந்தன் முல்லைத்தீவு ஏ35 வீதியின் கண்டாவளை வெளிக்கண்டல் சந்தியில் பாலத்தில் பயணித்த இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட டிப்பர் வாகனம் பாலத்தையும் சேதப்படுத்தி டிப்பர் வாகனமும் சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று(06) மதியம் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


