மஸ்கெலியாவில் குடும்பஸ்தர் நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு

மஸ்கெலியா, பிரவுன்லோ தோட்டப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(08) மாலை 5.30 மணியளவில் மவுசாகலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில், இவரின் குடும்பத்தினர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சடலத்தை சுழியோடிகளின் உதவியோடு மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 55 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலு மருதமுத்து என்பவர் என தெரிய வந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா க்ளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதையடுத்து, மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *