1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஷூஹதாக்கள் நினைவு தினம்

1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஷூஹதாக்கள் நினைவு தினம் இன்று(12) ஏறாவூரில் அனுடிக்கப்பட்டது.

 

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு ஏறாவூர் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களிலும் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 

இவர்களின் ஞாபகார்த்தமாகவே ஷூஹதாக்கள் நினைவு தினம் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

 

இது தொடர்பான பிரார்த்தனை ஏற்பாடுகள் ஷூஹதாக்கள் ஞாபகார்த்த பேரவையின் ஏற்பாட்டில் அதன் ஷூஹதாக்கள் ஞாபகார்த்த பேரவைத் ஸ்தாபகத் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்றது.

 

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் எஸ்.எம்.நழீம், நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், உட்பட இறந்தவர்களின் குடும்ப உறவினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

35 ஆவது ஷூஹதாக்கள் நினைவு தினத்தையிட்டு ஏறாவூர் நகர் பகுதியில் வர்த்த நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *