பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(12) காலை 10:00 மணியளவில் உப தவிசாளர் சிவகுரு செல்வராசா தலைமையில் இடம்பெற்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று திட்டமிட்ட நிலையில் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் சுகவீனம் காரணத்தால் வருகை தராத நிலையில் உப தவிசாளர் தலைமையில் சிறு நேரம் அக வணக்கத்துடன் ஆரம்பமானது.

அத்துடன் சபையால் வழங்கப்படும் விசேட அனுமதி மற்றும் அனுமதி தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அனுமதிகளும் வழங்கப்பட்டது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பயன்படுத்தப்படாத நிலங்களுக்கு 2 வீத வரி அறவிடுவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் அதனை மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவித்து உடனடியாக செயற்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின் பளை பொதுச் சந்தையில் காணப்படும் இடிபாட்டு கட்களை தேவையின் நிமித்தம் காணப்படும் வீதிகள் மற்றும் தேவையின்றி காணப்படும் இடங்களை நேரடியாக சென்று பார்வையிட்டு அவ்விடங்களுக்கு வழங்குவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

வீதி விளக்குகள் திருத்தம் மற்றும் புதிதாக அமைப்பது தொடர்பான கூலி தொடர்பாக வாத பிரதிவாதம் இடம்பெற்றது.

2018 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்கு வலுச்சேர்க்கும் முகமாக செம்மணி விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை கட்டாயம் வேண்டும் என பிரேரனை முன்வைக்கப்பட்டதுடன் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இதனை சபையில் தீர்மானம் எடுக்க முடியாது என தமது கருத்துக்களை முன்வைத்ததுடனும் தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் என்பவர்கள் செம்மணியில் அவமானப்படுத்தப்பட்டார்கள் என பல எதிர்க்கருத்துக்களை சபையில் முன்வைத்தனர்.

அத்துடன் பல எதிர்புக்களின் மத்தியில் இவ் வலுச்சேர்க்கும் விடயத்தை 2018 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் இணைப்பது தொடர்பாக சபையில் கலந்துரையாடப்பட்டது.

இன்றைய பிரதேச சபை அமர்வில் 13 உறுப்பினர்களில் 11உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *