தலைமன்னாரில் 24 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சா பறிமுதல்

தலைமன்னார், பேசாலை கரையோரப் பகுதியில் நேற்று(12) 24 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
தலைமன்னார், குடியிருப்பு மற்றும் பேசாலைக்கு இடைப்பட்ட கரையோரப் பகுதியில், இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்படையினரால் 110 கிலோகிராம் 600 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மொத்த மதிப்பு 24 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும் எனக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினர் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைத்திருந்த 3 சந்தேகத்திற்கிடமான பொதிகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
அந்தப் பொதிகளிலிருந்து 110 கிலோகிராம் 600 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், கைப்பற்றப்பட்ட குறித்த கேரள கஞ்சா பொதிகளை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் காவல்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *