கரைச்சி – கனகபுரம் பாடசாலை பின்வீதி புனரமைப்பு பணி ஆரம்பித்து வைப்பு

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் உள்ளூர் வீதிகள் புனரமைப்பின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கனகபுரம் பாடசாலை பின்வீதி புனரமைப்பு பணி இன்று(14) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த வீதி புனரமைப்புப் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் கருணானந்தன் இளங்குமரன் ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், கடற்றொழில் அமைச்சரின் கிளிநொச்சி மாவட்ட இணைப்புச்செயலாளர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

805 மீற்றர் நீளமான குறித்த வீதி காப்பற் வீதியாக 45 மில்லியன் செலவில் புனரமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *