சமூர்த்தி வங்கி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு

சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் (11) நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சாய்ந்தமருதில் உள்ள 17 பிரிவுகளின் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்கி வைத்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் மற்றும் சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ். ஹிதாயா உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் சங்கத் தலைவர்கள் உட்பட சங்க உறுப்பினர்கள் 17 பேருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.
சமூர்த்தி வங்கிக்குப் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் இவ்வாண்டின் (2025) முதலாவதாக அம்பாறை மாவட்டத்திலேயே அதிலும் சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் உறுப்பினர்களுக்கே வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *