கடந்த வாரம் முத்தையங்கட்டு பகுதியில் அப்பாவி இளைஞன் அநியாயமாக கொல்லப்பட்டதற்கு அவ் இளைஞனுக்கு நீதி வேண்டி 18ஆம் திகதி அன்று வடக்கு கிழக்கு மாவட்டங்களில் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி அனைத்து வர்த்தக நிலையங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அநியாயமாக கொல்லப்பட்ட முத்தையங்கட்டு இளைஞனுக்கு நீதிவேண்டி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதற்கு அனைத்து தரப்பினரையும் தமது ஆதரவினை வழங்க வேண்டும் என தெரிவித்து இன்று(16) கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார்.

