வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் அறிமுக நிகழ்வு

இம்முறை நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் அறிமுக நிகழ்வு  இன்று முறக்கொட்டான்சேனையில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்,வேட்பாளர்கள் தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முறக்கொட்டான்சேனை முத்துமாரியம்மனின் அருளாசி வேண்டி வணக்கத்தில் ஈடுபட்டதுடன்,மங்கள விளக்கேற்றி மௌன இறைவணக்கத்துடனும் உயிர் நீத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டது.

கோறளைப்பற்று வட்டராத்திற்கான போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும்  நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் மலர் மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து  மக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன் மற்றும்  வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர்கள் தேர்தல் பிராச்சாரம் தொடர்பான உரையாற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *