மஸ்கெலியா வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவில் தோட்டப்புற இளைஞர், யுவதிகளையும் இணைத்துக் கொள்ளுங்கள் என மஸ்கெலியா பிரதேச சபை பிரதி தவிசாளர் ராஜ் அசோக் கேட்டுகொண்டுள்ளார்.
மஸ்கெலியா வைத்தியசாலை பொறுப்பதிகாரி திரு.இர்ஷாட் மற்றும் தற்பொழுது இருக்கும் அபிவிருத்திக் குழுவிடம் இந்த விடயம் சம்பந்தமாக கேட்டுகொண்டதற்கு இணங்க இன்னும் இரண்டு வாரங்களில் புதிய அபிவிருத்திக் குழு புதுப்பிக்கப்படுவதாகவும் அதில் இணைத்து கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் ராஜ் அசோக் தெரிவிக்கையில், தமது வைத்தியசாலையின் அபிவிருத்தியில் அனைவருக்கும் பங்கு இருக்கின்றது. சுமார் 65000 மக்கள் 11 கிராமசேவகர் பிரிவு இருக்கின்றது. அனைவரும் ஒன்றாக ஒற்றுமையாக இனம், மதம் என்று இல்லாமல் அனைவரும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு ஒன்றுபடுங்கள் என்றும் தனது வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

