இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி!!

இலங்கை – சிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

அதன்படி, இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 278 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இலக்கை 49.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பதும் நிஸ்ஸங்க 136 பந்துகளில் 122 ஓட்டங்களை எடுத்தார்.

நுவானிந்து பெர்னாண்டோ 14 ஓட்டங்கள், குசல் மெண்டிஸ் 5 ஓட்டங்கள், சதீர சமரவிக்ரம 31 ஓட்டங்களை எடுத்தார்கள்.

சிம்பாப்வே அணிக்காக பிராட் எவன்ஸ் மற்றும் ரிச்சர்ட் ந்காரவா தலா 2 விக்கெட்டுகளையும், ஈஸ்ட் மசுகு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *