எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து

எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
கொலன்னாவையிலிருந்து கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன எண்ணெய் கிடங்கு வளாகத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தியே இவ்வாறு முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த சிறுவன் வட்டவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது.
எரிபொருள் கொள்கலன் பாரவூர்தியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *