ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்க்கு உட்பட்ட ஹேவாஹேட்ட தெல்தோட்டை நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயம் பாடசாலை அதிபர் மகேந்திரன் தலைமையில் விஷேட நடமாடும் சேவை நேற்று(13 )நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மனித உரிமை ஆனைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் பூஞ்சிஹேவா மற்றும் அதில் மத்திய மாகாண கண்டி பிராந்திய ஒருங்கினைப்பாளர் மனித உரிமை ஆணைக்குழு விரஞ்சன் டயஸ் சுமனசேகர கலந்துகொண்டு நிகழ்வை நடத்தினார்.
தெல்தோட்ட பிரதேச செயலக அதிகாரிகள், கலஹா பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கிராம சேவகர்கள் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு அறிந்து கொண்டு அதற்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஆன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.


