ஹட்டன் நகரில் இறைச்சி விற்பனை நிலையமொன்றில் வாடிக்கையாளர்களிடம் அடாவடித்தனமாக அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நடந்து கொள்வதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
தனி இறைச்சி, எழும்பு கலந்த இறைச்சி இன்னும் சில ரகங்களில் இங்கு இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. எனினும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய விதத்தில் இறைச்சி முறையாக வகைப்படுத்தப்படவில்லை.
தனி இறைச்சி எனும் பெயரில் எலும்பும் கலந்து விற்பனை செய்கிறார்கள். அதுபோலவே எலும்புடன் விற்பனை செய்யப்படும் இறைச்சியில் அதிக விகிதத்தில் எலும்பு இருப்பதாகவும் மிகவும் சொற்ப அளவில் இறைச்சி இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தில் வசிக்கும் மக்கள் இந்த கடையின் வாடிக்கையாளர்கள் என்பதால் அவர்களை அலட்சியம் செய்வதாக தெரியவருகின்றது.
இங்கே இது தொடர்பாக பேசினால் அவர்களை தரம் குறைவாக ஏசி பேசுவதாக தெரியவந்துள்ளது. மேலும், ஹட்டன் மாட்டிறைச்சிக் கடையில் வாடிக்கையாளர்களுக்கான மதிப்பும் மரியாதையும் கிடைப்பதில்லை.
வாடிக்கையாளர் இறைச்சி தொடர்பில் எதாவது கேட்கையில் சரியான பதில் கிடைப்பதில்லை. மாறாக நக்கல் நையாண்டியாகவே பதில் கிடைக்கிறது. விலைக்குத் தகுந்த பொருள் கிடைப்பதில்லை.
எனவே இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்திற்க்குக் கொண்டு சென்று சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றனர்.

