Skip to content

தோட்ட கள உத்தியோகத்தர் முகாமையாளரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

தோட்ட கள உத்தியோகத்தர் தோட்ட முகாமையாளரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் கடந்த மாதம் 29ஆம் திகதி அன்று பத்தனை கிரேக்ளி தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை தாம் முன்னெடுத்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு முகாமையாளர் தம்மை தாக்கியதாகவும் இது தொடர்பில் 119 இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, இலங்கை மணித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்ட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஆறுமுகம் முருகதாஸ் தெரிவித்தார்.

மேலும் அவருக்கு நடந்த அநீதியை இவ்வாறு குறிப்பிடுகின்றார் – அதாவது சரியாக 29.08.2025 அன்று 11.30 மணியளவில் என்னை அலுவலகத்திற்கு வரச் சொல்லி என்னை நெஞ்சில் தாக்கினார். பின்பு நான் கொட்டகொலை வைத்தியசாலைக்கு சென்று பின்பு ஆம்புலன்ஸ் ஊடாக கிலங்கின் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டேன்.

29 தொடக்கம் ஒகஸ்ட் 03 செப்டம்பர் 2025 வரை வைத்தியசாலையில் இருந்தேன். 119 தொடர்பு கொண்டு திகதி 29.08.2025 எனது விடயத்தை கூரீனேன். ஆனால் பின்பு 02.09.2025 திகதியும் புகார் கொடுத்தேன். ஆனால் எந்த விதமான சட்டத்தையும் இன்று வரை யாரும் எடுக்க வில்லை என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'voiceofmedia.lk' Copyright © 2025 VOM Network (pvt) Ltd. (voice of media network)