யாழ்ப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு இன்று(28) இடம்பெற்றது.

 

பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் இன்று காலை இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலைப்பீட வரலாற்றை வெளிப்படுத்தும் நூலொன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

 

குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதனொரு அங்கமாக பல்கலைக்கழக கலைப்பீட வரலாற்றை வெளிப்படுத்தும் புகைப்பட கண்காட்சியும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *