இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று(29) நடைபெற்ற மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் 15 ஓட்டங்களால் இந்தியா பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
அப் போட்டியில் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டுக்கான மைல்கல் சாதனை ஒன்றை ஆரம்ப வீராங்கனை ப்ரதிக்கா ராவல் நிலைநாட்டினார்.
தனது 8ஆவது போட்டியில் விளையாடும் ப்ரத்திகா, மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 500 ஓட்டங்களைப் பூர்த்திசெய்து இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் விற்பன்னர் சார்லட் எட்வேர்ட்ஸுக்கு 28 வருடங்கள் சொந்தமாக இருந்த சாதனையை முறியடித்தார்.
சார்லட் எட்வேர்ட்ஸ் 9 போட்டிகளில் 500 ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தார்.

