இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், இன்றைய (30) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 994,670 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 35,090 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் 280,700 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது, 22 கரட் தங்க கிராம் 32,170 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 257,350 ரூபாவாகவும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,710 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 245,650 ரூபாவாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

