சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை; விசாரணைகள் ஆரம்பம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு பகிடிவதையே காரணமென தெரிவித்து, அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர் சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

 

சம்பந்தப்பட்ட முறைப்பாடு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.

 

அதன்படி, இந்த மாணவணின் தற்கொலைக்குக் காரணம் பகிடிவதையா? என்பது தொடர்பில் கண்டறிவதற்காக தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

 

பகிடிவதை என்பது குற்றவியல் குற்றம் என்பதால், யாரேனும் பகிடிவதையில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *