மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் சட்டவிரோத கசிப்பு கைப்பற்றப்பட்டு இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை அதிரடியாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் 15க்கு மேற்பட்ட பொலிஸார் ஒன்றினைந்து சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்களைத்தேடி இடம்பெற்ற சுற்றிவளைப்பில் மாவடிவேம்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வீட்டு முற்றத்தில் புதைக்கப்பட்ட 40 லீற்றர் கசிப்பு பரல் மற்றும் வீட்டின் உரிமையாளர் ஒரு ஆண் மற்றும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பகுதியிலுள்ள சகல இடங்களையும் பொலிஸார் சோதனை செய்தனர்.
குறித்த இடத்திற்கு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேசசபை தவிசாளரும் வருகைதந்து சட்டவிரோத கசிப்பு விற்பனை செய்யும் இடங்களை அடையாளப்படுத்திக் கொடுத்தமையினால் குறித்த இடங்களில் சோதனை செய்யப்பட்டு கசிப்பு விற்பனை இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தியினால் மாவடிவேம்பு பகுதியிலுள்ள மக்கள், குடும்பங்கள் மற்றும் பாடசாலை பிள்ளைகள் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதேவேளை நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு சந்திவெளி பொலிஸார், தவிசாளர் மற்றும் சித்தாண்டி சமூகமட்ட இளைஞர்கள் ஒன்றினைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கசிப்பு மற்றும் சந்தேகேத்தின் பெயரில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
நேற்றிலிருந்து கசிப்பு தொடர்பான பிரச்சினை இருக்கும் இடங்களுக்கு ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரனின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை சித்தாண்டி சமூக செயற்பாட்டு இளைஞர்களும் குறித்த கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தொடர்ச்சியாக பொலிஸாருடன் இணைந்து ஒத்துழைப்புங்களை வழங்கி வருகின்றமை குறிப்படத்தக்கது.

