கிண்ணியாவில் ஆணின் சடலம் மீட்பு

கிண்ணியா தோனா கடலூர் முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று(16) காலை கிண்ணியா பொலிஸார் மீட்டுள்ளனர்.
கிண்ணியா தோனாவில் கடலூர் முருகன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான கடையொன்றின் முன்னால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காலையில் சடலத்தை கண்ட கிண்ணியா பொதுமக்கள் சிலர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பொலிஸார் அங்கு விஜயம் செய்து சடலத்தை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *