இன்று(03) நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுகின்ற நிலையில், இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அமைதி காலம் அமுலில் இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இம் மாதம் 06ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி காலம் நிலவும் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

