கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து; 4 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் நேற்று(02) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மருத்துவமனையின் விபத்துப் பிரிவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயையடுத்து அங்கிருந்த 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் புகை காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 8 மணியளவில் மின்சார சேமிப்பு அறையில் ஏற்பட்ட மின்கசிவே இவ் விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இவ் விபத்து தொடர்பில் மேலதிக  விசாரணைகளை கோழிக்கோடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *