வீடு வீடாகச் சென்று வாக்கு கோரிய வேட்பாளர் ஒருவர், வீடொன்றில் இருந்த இளம்பெண்ணுக்கு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது
வீடொன்றுக்குள் நுழைந்து 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில், இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என லக்கல பொலிஸார் தெரிவித்தனர்.
புதிதாக உருவாகியுள்ள அரசியல் கட்சியொன்றின் சார்பில் லக்கல பிரதேச சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் நேற்று(03) மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முடிவடைய சில மணி நேரங்கள் இருக்கையில், வீடு வீடாகச் சென்று வாக்கு கோரும் நிகழ்வின் போது இந்த வன்புணர்வுச் சம்பவம் நடந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், 650 சுவரொட்டிகளை வைத்திருந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேறு இரு வேட்பாளர்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டதாக லக்கல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.