பருத்தித்துறை நகர மக்கள் நலன் சார்ந்தே நாம் பாதீட்டுக்கு வாக்களித்தோம் – ஜெய கோபி

இன்று(15) பருத்தித்துறை நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு வெற்றிகரமாக நிறைவேற்றபட்டதன் அடிப்படையில் ஜனநாயக போராளிகள் கட்சியின் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி பாதீட்டுக்கு தமது ஆதரவை வழங்கியது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

 

அவர் இவ் பாதீடானது பருத்தித்துறை நகர மக்கள் சார்ந்து இருந்ததால் தான் அதற்கு தாம் தனது முழு ஆதரவை வழங்கியதாகவும் தொடர்ந்தும் மக்கள் நலன் சார்ந்தே செயற்படப் போவதாகவும் கூறினார்.

 

மற்றும் தாம் எந்தத் தரப்பாக இருந்தாலும் மக்கள் பிரச்சனைகள் மற்றும் மக்கள் சேவை நோக்கில் செயற்படுமாயின் அவர்களுடன் தாம் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *