யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடத்தை விஸ்தீரணமாக அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று(15) இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள வளாகத்தில் சர்வமத வழிபாடுகளுடன் அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று மதியம் இடம்பெற்றது.
விமான நிலைய அதிகாரிகள் மற்றும் துறைசார் அலுவலர்களின் பங்கேற்புடன் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளது. இரண்டு கட்டடங்களுக்கும் 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

