பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் இணைந்த சேவையின் கீழுள்ள பிஎல் பகுதியினைச் சேர்ந்த அலுவலர்களிற்கான இரண்டு நாட்களினைக் கொண்ட திறன் விருத்தி பயிற்சி நிகழ்வானது கடந்த 13,14 ஆகிய திகதிகளில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சியின் வளவாளர்களாக கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் சிவராஜா, கண்டாவளை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் அருந்தவராணி, கிளிநொச்சி மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சுரேகா, கிளிநொச்சி மாவட்ட செயலக உளவள அலுவலர் கவிப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிற்சி நெறியில் கிளிநொச்சி மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் மற்றும் அதனோடிணைந்த ஏனைய திணைக்களத்தினை சேர்ந்த இணைந்த சேவையின் கீழுள்ள பிஎல் பகுதியினைச் சேர்ந்த அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சாரதிகள் கலந்து கொண்டிருந்தனர்.


