முல்லைத்தீவின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் இன்று(17) மதியம் 12:00 மணியளவில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான திலகநாதன். தலைமையில் நடைபெற்றது.
இவ் அமர்வில் பிரதேச செயலாளரினால் பேரிடர் கால அவசரத் தேவைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அது விடயமாக கலந்துரையாடப்பட்டது. திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத்தினருடனும் அதனை விட அபிவிருத்தி செய்ய வேண்டிய புனரமைக்கப்பட வேண்டிய குளங்கள் கால்வாய்கள் வீதிகள் தொடர்பாகவும் பேசப்பட்டது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் து. ரவிகரனால் பாராளுமன்றில் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
இதில் மாந்தை கிழக்கில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை தொடர்பாக பேசப்பட்டது. கசிப்பு உற்பத்தி, விற்பனை செய்பவர்களுக்கு நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய இரண்டாவது நிலை பொலிஸார் உடந்தையாக இருப்பது பற்றியும் எந்தவிதமான நடவடிக்கையும் நட்டாங்கண்டல் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என அமைப்பு சார்ந்தவர்கள் மற்றும் திணைக்கள உத்தியோத்தர்களும் தெரிவித்தனர்.
கால் நடைகள் இரவு பகல் வளர்ப்பாளர்கள் வீதிகளிலும் விவசாய காணிகளிலும் விடுவது தொடர்பாக பேசப்பட்டது. அதுவும் பிரதேச சபையால் நடவடிக்கை எடுப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. அதற்க்கும் பொலிஸாரி உதவி கோரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

