தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியிலிருந்து சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் பொலிஸாரின் சமிக்கையை மீறிச்சென்றதால் பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரின் சமிக்கையை மீறி டிப்பர் வாகனத்தை நிறுத்தாமல் உள்ளக வீதியூடாக தப்பிச்செல்ல முற்பட்ட வேளை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக டிப்பர் வாகனம் குடை சாய்ந்தது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

