உயர்தர பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு மாகாண மாணவர்களைக் கெளரவிக்கும் வடமாகாண நிகழ்வானது கிளிநொச்சி நெலும்பிய மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரொஷன் கமகே தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்  பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன, இராமலிங்கம் சந்திரசேகர், மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வள அமைச்சர், கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், சிறீபவானந்தராஜா மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரொஷன் கமகே ஆகியோர். கலந்து கொண்டனர்.

06 பாடப் பிரிவுகளின் மாவட்டங்களில் 1-10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *