தர்மபுரத்தில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணாக மணல் ஏற்றிய 5 டிப்பர்கள் பறிமுதல்

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று(27) பறவைகள் சரணாலயம் பகுதியில் அனுமதி இன்றி முல்லைத்தீவு மாவட்டத்தின் மணல் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர் வாகனங்களை அதன் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் தகவலுக்கு அமைவாக நே‌ற்று அதிகாலை தருமபுரம் பொலிஸார் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகரின் குற்றத்தடுப்புப் பிரிவினர் இணைந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்டனன்.

 

குறித்த சுற்றிவளைப்பின் மூலம் 5 டிப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த டிப்பர் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த தடயப் பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *