முல்லையில் தமிழரசின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன நான்கு சபைகளையும் கைப்பற்றுவோம்: ரவிகரன் எம்.பி உறுதி

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி வேட்புமனுப் பத்திரங்களைக் கையளித்திருந்தநிலையில், குறித்த நான்கு உள்ளூராட்சி சபைகளுக்குமான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இது தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தைகிழக்கு ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தினைச் செலுத்தி, உரிய முறையில் வேட்புமனுக்களைக் கையளிதோம்.

அந்தவகையில் நான்கு உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *