நுவரெலியாவில் இன்று(23) பல பகுதிகளில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு ஏற்பட்டுள்ளதுடன் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நுவரெலியா முழுவதும் அதிகாலை நேரங்களில் தொடர்ந்து கடும் துகள் உறைபனி சூழல் நிலவி வருகிறது.
இந்த துகள் பனிப்பொழிவின் காரணமாக மலையக மரக்கறி பயிர்ச்செய்கை, மலர் உற்பத்தி மற்றும் தேயிலைப் பயிர்ச்செய்கை ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளதால், அவர்களின் வருகை எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.

