2025 – 2026 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ், விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான உத்தியோகபூர்வ குறைந்தபட்ச விலைகளை அரசாங்கம் இன்று(16) அறிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஏ.எம்.யூ. பின்னலந்த இந்த விபரங்களை வெளியிட்டார்.
அதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கொள்வனவு விலைகள்:
நெல் வகை 1 கி.கி. விலை
கீரி சம்பா ரூ. 140
சம்பா ரூ. 130
நாடு ரூ. 120
இம்முறை பெரும்போக நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ரூ. 10 பில்லியனை ஒதுக்கியுள்ளது.

